Home இந்தியா சரவணன், சேலத்தில் இன்னோஹப் நிறுவனத்தை திறந்து வைத்தார்!

சரவணன், சேலத்தில் இன்னோஹப் நிறுவனத்தை திறந்து வைத்தார்!

306
0
SHARE
Ad

சேலம் : தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் innohub மென்பொருள் அலுவலகத்தை மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 15) திறந்து வைத்தார்.

இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் 14 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக டத்தோஸ்ரீ டாக்டர் எம் சரவணன் மற்றும் மணக்குல விநாயகா மருத்துவக்கல்லூரியின் தலைவர்,
தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் எம் தனசேகரன் அவர்களும் கலந்து கொண்டு ஆக்கம் 360 இன் மென்பொருள் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார் , தலைமை இயக்குனர் திரு திருமூர்த்தி ஆறுமுகம் , இணை செயலாளர் திருமதி கோகிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.