Home One Line P2 நடமாட்டக் கட்டுப்பாட்டு மீட்பு நிலை மார்ச் 31 வரை நீட்டிப்பு

நடமாட்டக் கட்டுப்பாட்டு மீட்பு நிலை மார்ச் 31 வரை நீட்டிப்பு

472
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மீட்பு நிலை இன்று முதல் எதிர்வரும் மார்ச் 31 (2021) வரை நீட்டிக்கப்படுகிறது, பாதுகாப்புத் துறைக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இதனை அறிவித்தார்.

கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கிறது. தற்போது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் நாடு ஓராண்டு காலத்திற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இருந்து வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளை மீறியதற்காக 347 பேர் நேற்றுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 337 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.