சென்னை :ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடர் நிகழ்ச்சி தற்போது 90 நாட்களைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் இரசிகர்களைக் கவர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் இல்லத்திலிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்ட பின்னர், கடந்த வாரத்தில் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் அனிதா சம்பத் பெரும்பான்மை இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.
அவர் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அனிதா சம்பத்தின் தந்தையார் சம்பத் உடல் நலக்குறைவால் காலமானார்.
கேப்பிரியல்லா காப்பாற்றப்பட்டார்
இதற்கிடையில் இந்த வாரம் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 5 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆஜித், சோம் சேகர், ஷிவானி, ரம்யா பாண்டியன், கேப்பிரியல்லா ஆகியோரே அந்த ஐவராவார்.
அவர்களில் கேப்பிரியல்லா காப்பாற்றப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.
எஞ்சிய நால்வரில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கமல் தெரிவித்திருந்தார்.