Home One Line P1 தைப்பூசம்: பினாங்கில் மக்கள் திரள் இல்லை- பூசைகள் நேரலையாக ஒளிபரப்படும்

தைப்பூசம்: பினாங்கில் மக்கள் திரள் இல்லை- பூசைகள் நேரலையாக ஒளிபரப்படும்

529
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அனுசரிக்கப்பட்டு வந்த தைப்பூசத் திருவிழா, முதல்முறையாக, பொதுமக்கள் பங்கேற்பை அனுமதி இல்லை என்று மாநிலம் முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக, இரண்டு கோவில்களில்நடைபெறும் பூசைகளை பக்தர்கள் பார்ப்பதற்கு நேரடி ஒளிபரப்பை நடத்த பினாங்கு இந்து அறவாரியம் முடிவு செய்துள்ளது.

கொவிட் -19 காலங்களில் பக்தர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எனவே, இந்த ஆண்டின் தைப்பூசத்தில் இரதங்கள், கவாடிகள், பால்குடம் அல்லது பக்தர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பக்தர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு பொறுப்பான மத அமைப்பாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். ” என்று அவர் கூறினார்.

பினாங்கின் ஐந்து மாவட்டங்களும் கொவிட் -19 சிவப்பு மண்டலங்களாக மாறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பினாங்கு இந்து அறவாரியத்தின் கீழ் உள்ள மலையடிவாரமான அருள்மிகு பாலதண்டாயுதபானி கோயிலும், நாட்டுகோட்டை செட்டியார் கோயிலும் தைப்பூசப் பண்டிகையை கொண்டாடுகின்றன. மேலும், இரண்டு கோயில்களும் மூன்று நாட்கள் கொண்டாட்டத்தின் போது இரத ஊர்வலங்களை நடத்தி வருகின்றன.

கொவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தீவின், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்கள், செபெராங் பெராய் உதாரா, செபெராங் பெராய் தெங்கா மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள தென் செபெராங் பெராய் ஆகியவை நேற்று சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

பினாங்கில் நேற்று 60 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் 2,027 சம்பவங்களும் எட்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.