Home One Line P1 சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்

சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சத்தியப்பிரமாணம் ஒன்றை முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று வெளியிட்டு உறுதிபடுத்தினார்.

இந்த சத்தியப்பிரமாணம் மாமன்னருக்கும் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார். இது தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

“தேசிய முன்னணி தலைமையில் தேசிய கூட்டணியை வீழ்த்த அன்வார் இப்ராகிமுக்கு அம்னோ தலைவர் அளித்ததை நான் உறுதிப்படுத்துகிறேன். இந்த ஆதரவு குறித்து மாமன்னருக்கும் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அனுவார் மூசா தேசிய முன்னணி மற்றும் முவாபாக்காட் நேஷனல் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அகமட் சாஹிட் எடுத்த இந்த நடவடிக்கையில் ஜசெகவும் இடம்பெற்றிருந்ததை அனுவார் குறிப்பிட்டார்.

கடந்த மாதங்களில் அனுவார் மூசா அதிகமாக தேசிய கூட்டணியை ஆதரித்துப் பேசி வந்தது அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று அவர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அப்பதவிக்கு அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் நியமிக்கப்பட்டார்.