Home One Line P1 கட்சிக்கு துரோகம்- ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

கட்சிக்கு துரோகம்- ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மசீசவில் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட செய்தி ஒன்றைத் தொடர்ந்து, ஜசெக மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் சியோக் கெங்கிற்கு காரணக் கடிதத்தை ஜசெக கட்சி வெளியிட்டுள்ளது.

நன்யாங் சியாங் பாவ், நேற்று லியோங் மசீசவில் சேர விண்ணப்பித்ததாக செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில் ஜசெக பொகொ அசாம் சட்டமன்ற உறுப்பினர் லீவ் தை இ எந்நேரத்திலும் கட்சியை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.

லியோங் இந்த குற்றச்சாட்டுகளை இன்னும் மறுக்காத நிலையில், இந்த ஊகங்கள் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

மலேசியாகினியிடம் பேசிய ஜசெக ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் சோங் சியென் ஜென், லியோங், இந்த விஷயத்தை கட்சிக்கு விளக்க மூன்று நாட்கள் உள்ளன என்று கூறினார்.

அது தோல்வியுற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“நன்யாங் அறிக்கை உண்மையா என்பதை தெளிவுபடுத்துமாறு நாங்கள் அவரிடம் கேட்கிறோம். ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எங்களால் முடிவுகளை எடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

மசீச தலைவர் மா ஹாங் சூன், இதற்கிடையில், இந்த செய்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. கட்சிக்கு ஏற்ப கருத்துக்களும் குறிக்கோள்களும் உள்ள எவரையும் கட்சி வரவேற்கிறது என்று அவர் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.