Home One Line P1 பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா

பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு பதிலாக அம்னோ பொதுச் செயலாளராக அகமட் மஸ்லானின் நியமனம் குறித்து கட்சிக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், தேசிய முன்னணி அரசியலமைப்பில் எந்தவொரு தேவையும் அதற்கு இல்லாததால் ஒருவரை நீக்குவது முறையானது என்று அவர் கருதுகிறார்.

#TamilSchoolmychoice

“டான்ஸ்ரீ அன்வார் மூசாவை நீக்குவது முறையானது. ஆனால், தேசிய முன்னணி உச்சமன்றக் குழு மூலம் மட்டுமே ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்க முடியும். பணிநீக்கம் செய்யலாம், ஆனால், நியமிக்க முடியாது. அதை உச்சமன்றக் குழு மட்டுமே செய்ய முடியும், ”என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய மசீசவும், இதே கருத்தினை நேற்று முன்வைத்திருந்தது.

அனுவார் மூசா பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்று மசீச தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையில் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், அதன் செல்லுபடியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மசீச கூறியுள்ளது.

“மசீச கட்சியின் கருத்துப்படி, தேசிய முன்னணியில் ஒரு பதவிக்கு நியமனம் செய்யப்பட வேண்டுமெனில், அது தேசிய முன்னணி அரசியலமைப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். வழக்கமாக இந்த நியமனத்தை தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து முன்வைத்து ஒப்புக் கொள்ள வேண்டும்,” என்று மசீச கூறியது.

நேற்று, தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசாவை அக்கூட்டணி நீக்கியதாக தெரிவித்தது.

தேசிய கூட்டணி, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு சாதகமாக பேசி வந்ததை அடுத்து அனுவார் மூசா அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தினார். மேலும், தம்மை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமானால் நீக்கட்டும் என்று அனுவார் முன்பு  குறிப்பிட்டிருந்தார்.

மலாய் கட்சிகள் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கங்களிடையே ஒத்துழைப்பைப் பேணுவதற்காக அவர் விலக தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

அனுவாருக்கு பதிலாக தேசிய முன்னணி பொதுச்செயலாளராக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் நியமிக்கப்படுவார்.