Home One Line P1 ஜசெகவுடன் அம்னோ பணியாற்ற இருந்தது எனும் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் மறுத்தார்

ஜசெகவுடன் அம்னோ பணியாற்ற இருந்தது எனும் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் மறுத்தார்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க ஜசெகயுடன் இணைந்து அம்னோ பணியாற்ற தயாராகி வருகிறது எனும் முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் அனுவாரை சாடி, கட்சியின் அடிமட்டத் தலைவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கூட்டணி கூறு கட்சியுடன் பணியாற்றுவதை நிராகரித்ததால், அம்னோ ஜசெக உடன் இணைந்து பணியாற்றாது என்று அவர் கூறினார்.

“நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வருத்தப்பட்டாலும் அல்லது அனைத்து அம்னோ தொகுதித் தலைவர்களும் பெர்சாத்துவுடன் பணியாற்ற நிராகரித்ததை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய அவசியமில்லை. இது நிலைமையை மேலும் குழப்பமடையச் செய்கிறது.

#TamilSchoolmychoice

“அம்னோ அடிமட்ட உறுப்பினர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கட்சி. பெரும்பான்மையான அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் ஜசெகவுக்கு எதிராக இருந்தால் அம்னோ எப்படி ஜசெகவுடன் இணைந்து செயல்படும்? ” என்று நஜிப் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்க, அம்னோ உறுப்பினர்கள் ஜசெக தலைவர்களை சந்தித்ததை உறுதிப்படுத்தும் செய்தி தனக்கு கிடைத்ததாக அனுவார் கூறியிருந்தார்.