Home One Line P1 அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்

அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ் கூறினார்.

அம்னோ இனி பெர்சாத்துவுக்கு ஆதரவளிக்காத சூழ்நிலையில், மாமன்னர் பொதுத் தேர்தல் நடைபெறும்  வரை தற்காலிக அரசாங்கத்தை நியமிக்க முடியும் என்று அவர் கூறினார்.

“அம்னோ இப்போது என்ன செய்கிறதெனறால், பொதுத் தேர்தல் நடைபெற நாடாளுமன்றம் கலைக்க வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால், நாடாளுமன்றத்தை எப்போது கலைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மாமன்னர்தான். அது மாமன்னரின் உரிமை. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான நேரம் இது இல்லை என்று மாமன்னர் கருதினால், அவர் ஒரு தற்காலிக அரசாங்கத்தை நியமிக்க முடியும்,” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு, அம்னோ உச்சமன்றக் குழு இந்த மாத இறுதியில் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்தது.

மக்கள் ஆணையைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அம்னோவே முன்பு கோரியிருந்தது.

இப்போது இல்லை என்றாலும், பெர்சாத்துவுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இறுதியில் நடக்கும் என்று நஸ்ரி கூறினார்.

பெர்சாத்துவை நிராகரிப்பதற்கான அம்னோவின் நடவடிக்கை, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் ஓர் அரசாங்கத்தை உருவாக்க விரும்புவதாக அர்த்தமல்ல என்றும் நஸ்ரி வலியுறுத்தினார்.