Home One Line P1 அமெரிக்க நாடாளுமன்றம் போராட்டக்காரர்களால் முடங்கியது

அமெரிக்க நாடாளுமன்றம் போராட்டக்காரர்களால் முடங்கியது

526
0
SHARE
Ad

வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை (ஜனவரி 6) அமெரிக்கத் தலைநகரில் போராட்டத்தில் இறங்கினர்.

ஜோ பைடனின் வெற்றியை ஒத்திவைக்குமாறு கோரி இவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போராட்டக் காரர்கள் அலுவலகங்கள், அவையின் ஜன்னல்களை உடைத்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம், காவல் துறையினர் இந்த போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். பல காவல் துறையினர் காயமடைந்ததாகவும், ஒரு பெண் சுடப்பட்டார் என்றும் வாஷிங்டன் பெருநகர காவல் துறைத் தலைவர் ராபர்ட் கான்டி கூறினார்.

#TamilSchoolmychoice

காவல் துறை அதிகாரியால் சுடப்பட்ட பெண், பின்னர் உயிரிழந்தார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தைத் தாக்க முயன்றது, ஒரு கிளர்ச்சி அடிப்படையிலானது என்று ஜோ பைடன் கூறினார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட டிரம்ப் , தேர்தல் மோசடி குறித்து தனது தவறான கூற்றுக்களை மீண்டும் கூறியதோடு, போராட்டக்காரர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, டுவிட்டர் நிறுவனம் பின்னர் டிரம்பின் காணொலி பதிவை தடைசெய்தது. டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.