Home One Line P1 முடா கட்சியின் பதிவும் நிராகரிக்கப்பட்டது

முடா கட்சியின் பதிவும் நிராகரிக்கப்பட்டது

501
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் அமைச்சரான சைட் சாதிக்கின் முடா கட்சியின் பதிவும் சங்கப் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, துன் மகாதீர் வழிநடத்தும் பெஜுவாங் கட்சியின் பதிவை சங்கப் பதிவாளர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

முடா கட்சியின், இணை நிறுவனரான முதாலிப் ஒத்மான், சங்கப் பதிவாளர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் கடிதத்தின் படத்தினை வெளியிட்டு, நிராகரிப்பை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அண்மையில், கட்சியின் பதிவை கால தாமதப்படுத்துவதாக வழக்கறிஞர் கடிதத்தை முடா கட்சி சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கியிருந்தது.