Home One Line P1 பெஜுவாங் கட்சியின் பதிவு நிராகரிக்கப்பட்டது

பெஜுவாங் கட்சியின் பதிவு நிராகரிக்கப்பட்டது

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) பதிவை சங்கப் பதிவாளர் (ஆர்ஓஎஸ்) நேற்று புதன்கிழமை நிராகரித்தது.

இதன் விளைவாக, அக்கட்சி இன்று கட்சியின் பதிவு நிலையை தீர்மானிப்பதில் சங்கப் பதிவாளர் தாமதத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்றது.

இதை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்திய, கட்சியின் வழக்கறிஞர் மியோர் நோ ஹைதர் சுஹைமி, நேற்று பிற்பகல் பெஜுவாங்கிற்கு மின்னஞ்சல் மூலம் சங்கப் பதிவாளரின் கடிதம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டிசம்பர் 10-ஆம் தேதி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான பெஜுவாங், கட்சியின் பதிவு நிலை குறித்து ஒரு முடிவை எடுக்க சங்கப் பதிவாளரை கட்டாயப்படுத்த நீதித்துறையில் வழக்குத் தொடுத்திருந்தது.

சமுதாயச் சட்டம் 1966- இன் கீழ் ஒரு அரசியல் கட்சியாக முறையாக பதிவு செய்ய பெஜுவாங்கின் விண்ணப்பத்தை ஒப்புதல் அல்லது நிராகரிக்க வேண்டும் என்று அது கோரியிருந்தது.

சங்கப் பதிவாளர் மற்றும் அதன் இயக்குநர் எந்தவொரு விண்ணப்பத்திற்கும் பதிலளிக்கத் தவறியது நியாயமற்றது மற்றும் பதிவை தாமதப்படுத்துவது தவறான எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக பெஜுவாங் நீதிமன்றத்தை நாடியது.