Home அரசியல் சுல்கிப்ளி தேர்வு: ம.இ.கா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமா? – கோபிந்த் சவால்

சுல்கிப்ளி தேர்வு: ம.இ.கா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமா? – கோபிந்த் சவால்

552
0
SHARE
Ad

gobind_250_250கோலாலம்பூர்,ஏப்ரல் 17 – பெர்க்காசா துணைத்தலைவரான சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதி வேட்பாளராக நஜிப் அறிவித்ததற்கு, ம.இ.கா மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் வெளிப்படையான தங்களது ஆதரவை தெரிவிக்க முடியுமா என்று ஜ.செ.க கட்சியின் பூச்சோங் தொகுதி நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ சவால் விடுத்துள்ளார்.

இந்து மதத்தினரை மிகக் கேவலமான முறையில் பேசிய சுல்கிப்ளியை, தேசிய முன்னணி தங்களது வேட்பாளராக அறிவித்துள்ளது, அவர்களின் கூட்டணியில் நீண்ட காலமாக இருந்துவரும் ம.இ.கா விற்கு மிகப் பெரிய தலைக் குனிவு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்லின மக்கள் வாழும் இந்த மலேசிய மண்ணில் இனவெறியைத் தூண்டும் வகையில் ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசிய கல்விமான் ரிதுவான் டி அப்துல்லாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ம.இ.கா வைச் சேர்ந்த பல தலைவர்கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ம.இ.காவின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ்.வேல்பாரி கூட, ரிதுவான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் ம.இ.கா வை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் தற்போது, நஜிப் சுல்கிப்ளியை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது குறித்து, ம.இ.கா தலைவர்கள் இன்னும் தங்களது எதிர்ப்பைக் காட்டாதது ஏன் என்றும் கோபிந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அம்னோவை எதிர்க்க ம.இ.கா விற்கு துணிவு இல்லாத காரணத்தால் தான் இவ்விஷயத்தில் மௌனம் காப்பதாகவும் கோபிந்த் தெரிவித்துள்ளார்.