Home One Line P1 சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை

சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை

438
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதால், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது அனைவரையும் சென்றடையக்கூடிய திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

சிலாங்கூரில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 6,000- க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை வளங்களின் பற்றாக்குறையால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனைகளுக்கும், சுகாதார அமைச்சிற்கும் இடையிலான காணோலி மாநாட்டின் போது இது தெரியவந்தது.

#TamilSchoolmychoice

பொது சுகாதார அமைப்பில் உள்ள சில அழுத்தங்களை போக்க, தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதை விவாதிக்க காணொலி மாநாட்டின் போது தொடர்பு-தடமறிதல் முறை முன்னிலைப்படுத்தப்பட்டது.

கடந்த 10 நாட்களில் 30,000- க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கொவிட் -19 நோயாளிக்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்தால், மொத்த எண்ணிக்கை நூறாயிரக்கணக்கானவர்களாக இருக்கலாம்.

டிசம்பரில், சில கொவிட் -19 நோயாளிகளுடன் பேசிய மலேசியாகினி, மாவட்ட சுகாதார அலுவலகம் அவர்கள் குணமடைந்தபின் தொடர்புக் கொண்டதாக கூறினர். நிலைமை இப்போது டிசம்பரை விட மோசமாக உள்ளது.

கடந்த மாதம் சராசரியாக புதிய சம்பவங்கள் ஒரு நாளைக்கு 1,521 ஆகும். இந்த மாதத்தின் முதல் 19 நாட்களுக்கு, சராசரி கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 2,749- ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.