Home One Line P1 அவசரநிலை பிரகடனத்தை மறுபரிசீலனை செய்ய மாமன்னருக்கு பெஜுவாங் கடிதம்

அவசரநிலை பிரகடனத்தை மறுபரிசீலனை செய்ய மாமன்னருக்கு பெஜுவாங் கடிதம்

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெஜுவாங் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

“ஆமாம், இது இன்று (ஜனவரி 19) பிற்பகல் அனுப்பப்பட்டது. அவசரகால பிரகடனத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், கொவிட் -19 சூழ்நிலையை அவசரநிலை பிரகனமின்றி எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய வேறு சில பரிந்துரைகளை மாமன்னருக்குத் தெரிவிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று பெஜுவான் துணைதலைவர் மார்சுகி யஹ்யா மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான இக்கட்சி கடிதத்தை அனுப்பத் தயாராக இருப்பதாக நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கு போதுமானதாக இருந்ததால், இந்த நடவடிக்கைக்கு தாங்கள் உடன்பட்டதாக மார்சுகி கூறினார்.

இந்த கடிதத்தில் மகாதீர் (லங்காவி), முக்ரிஸ் மகாதிர் (ஜெர்லூன்), அமிருடின் ஹம்சா (குபாங் பாசு) மற்றும் ஷாருடின் முகமட் சல்லே (ஸ்ரீ காடிங்) உள்ளிட்ட நான்கு பெஜுவாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜனவரி 14-ஆம் தேதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரிடம் முறையீட்டு கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அவசரநிலை இப்போதைகு தேவையில்லை என்று நம்பிக்கை கூட்டணி கருதுகிறது. ஏனென்றால் நாட்டில் இப்போது எதையும் செய்வதற்கு பிரதமருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.