கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மொகிதின் யாசின் செர்டாங்கில் உள்ள மேப்ஸ் கொவிட்-19 2.0, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையத்தை பார்வையுற்றார்.
அங்கு நோயாளிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களின் அனைத்து முன்னணி ஊழியர்களின் அனைத்து முயற்சிகள் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
“மூன்று நாட்களில் 3,100 படுக்கைகளை தயார் செய்வது ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு அசாதாரண நடவடிக்கையாகும். இங்கு அதிகபட்சமாக 10,000 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றுவரை மொத்தம் 9,200 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன,” என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தாம் அங்குள்ள தொற்று நோயாளிகளை சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார். அவர்கள் அனைவரும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், வழங்கப்பட்ட சேவை மற்றும் சிகிச்சையில் திருப்தி அடைவதாகவும் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடினமான காலகட்டத்தில் அனைத்து கொவிட்-19 நோயாளிகளும் தொடர்ந்து உற்சாகமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் குணமடை பிரார்த்திப்பதாகவும் மொகிதின் தெரிவித்துள்ளார்.