கோலாலம்பூர்: மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். நேற்று முன்னதாக, பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆகியோர் இந்த தொற்றுக்கு ஆளாகினர்.
இந்த முறை பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை தாஜுடினின் சமூக ஊடக மேலாளர் தெரிவித்தார்.
தாஜுடின் ஜனவரி 19- ஆம் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
“அவருடன் (தாஜுடின்) நெருங்கிய தொடர்பு உள்ளவர்க, கொவிட் -19 பரிசோதனை செய்வது நல்லது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர், தெங்கு ரசாலி ஹம்சா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் துறையில் அமைச்சர் சுல்கிப்ளி முகமட், தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் மற்றும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் ஆகியோரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.