Home One Line P1 ‘கிம்மா’வை பெஜுவாங் கைப்பற்றும் என்பது வதந்தியே!

‘கிம்மா’வை பெஜுவாங் கைப்பற்றும் என்பது வதந்தியே!

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) கட்சியை பெஜுவாங் கட்சி கைப்பற்றும் என்ற குற்றச்சாட்டை டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா மறுத்துள்ளார்.

பெஜுவாங் கிம்மாவைக் கைப்பற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று அபுபக்கர் கூறினார். சங்கப் பதிவாளரின் அனைத்து தேவைகளையும் பெஜுவாங் பூர்த்தி செய்துள்ளதால் இது தேவையில்லாதது என்று அவர் கூறினார்.

“மக்கள் வெறும் ஊகமாக சொல்லலாம். பெஜுவாங் அம்னோ அல்லது பெர்சாத்துவையும் கைப்பற்ற விரும்புகிறது என்று மக்கள் கூறலாம். கட்சி பதிவு ஒப்புதல் பெற பெஜுவாங் காத்திருக்கிறது. பெஜுவாங் கட்சியை அரசாங்கம் அனுமதிக்காததற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது. பூர்த்தி செய்யப்படாத நிபந்தனைகள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் நிறைவேற்றுவோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கிம்மாவை பெஜுவாங் கைப்பற்றும் என்ற வதந்திகளைப் பற்றி கேட்டபோது அபுபக்கர் இதைக் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், கட்சித் தலைவர் முக்ரிஸ் மகாதீர், புத்ராஜெயாவில் சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் கட்சியை பதிவு செய்தார்.

முன்னாள் பிரதமர் மகாதிர் தலைமையிலான பெஜுவாங் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சங்கப் பதிவாளர் நிராகரித்துள்ளது.