Home One Line P1 அவசரநிலை பிரகடனத்தை அரசியல் விவகாரமாக்கக்கூடாது!

அவசரநிலை பிரகடனத்தை அரசியல் விவகாரமாக்கக்கூடாது!

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரநிலை பிரகடனத்தை அரசியல்மயமாக்கப்படக்கூடாது.

அதன் முக்கியத்துவத்தின் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நாடாளுமன்ற செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமின்றி, புதிய கட்டளைகளை உருவாக்குவதை இது ஊக்குவிக்கிறது. மேலும், இதன் மூலம் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் எளிதாக்குவதற்கும், அதிகாரம் அளிப்பதற்கும் இந்த பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அவசரநிலையை அறிவிக்கும்போது, அபராதத்தை அதிகரிக்க அவசரநிலை  கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, விதிகளை மீறும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் இந்த விஷயத்தை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மதிப்பாய்வு செய்கிறது.

“இந்த சட்டம் குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அபராதத்தின் அளவு அதிகரிக்கப்பட்டால், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் அதே குற்றத்தை மீண்டும் செய்ய பயப்படுவார்கள், “என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

ஜனவரி 12-ஆம் தேதி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின், ஆகஸ்ட் 1- ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறிய அறிக்கையை இஸ்தானா நெகாரா வெளியிட்டிருந்தது.

அவசரகால அமலாக்க காலத்தில், அரசு தொடர்ந்து மத்திய மற்றும் மாநில மட்டங்களில் செயல்படும். மேலும் அவசரகால பிரகடன அறிவிப்பால் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிர்வாகங்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் செயல்படும்.