Home One Line P1 சீனாவின் 59 செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்தது

சீனாவின் 59 செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்தது

730
0
SHARE
Ad

புது டில்லி: சீனாவுடனான நீண்டகால எல்லை முரண்பாட்டைத் தொடர்ந்து, சீன நாட்டு கைபேசி செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்துள்ளது. 59 செயலிகள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களுக்குப் பிறகு டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அது தடை விதித்துள்ளது.

மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கடந்த வாரம் செயலிகளுக்க்கான புதிய அறிவிப்புகளில், தடையைத் தொடர்ந்து, அவற்றின் பதில்களும் விளக்கங்களும் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது. இதன் விளைவாக, தற்காலிக தடை இப்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிட்டு 59 சீன செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசாங்கம் தடை செய்தது.

#TamilSchoolmychoice

இந்த பட்டியலில் டிக்டோக், ஹலோ, வீ சேட், அலிபாபாவின் யுசி உலாவி மற்றும் யுசி நியூஸ், ஷெய்ன், கிளப் பேக்டரி, லைக், பிகோ லைவ், குவாய், கிளாஷ் ஆப் கிங்ஸ் மற்றும் கேம் ஸ்கேனர் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 2-ஆம் தேதி, மேலும் 118 செயலிகளை அரசாங்கம் தடைசெய்தது. நவம்பரில் நாட்டில் 43 புதிய சீன கைபேசி செயலிகளைத் தடுத்தது. இதுவரை தடைசெய்யப்பட்ட சீன பசெயலிகளின் பட்டியலில் பப்ஜி மொபைல், கேம் கார்டு, வீவார்க்சைனா மற்றும் வீடேட் ஆகியவை அடங்கும்.