வாஷிங்டன்: கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விதிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த கட்டுப்பாடுகள், பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது.
அந்நாட்டில் கொவிட்-19 பாதிப்பு நாள்தோறும் இலட்சக்கணக்கிலும், உயிரிழப்பு ஆயிரக்கணக்கிலும் அதிகரித்து வருகிறது.
கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய தொற்று பணிக்குழு ஒன்றை ஜோ பைடன் அமைத்துள்ளார். மொத்தம் 13 பேர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.