Home One Line P1 இரத ஊர்வலம் பத்து மலை, பினாங்கில் எப்போதும் போல நடைபெற்றது

இரத ஊர்வலம் பத்து மலை, பினாங்கில் எப்போதும் போல நடைபெற்றது

549
0
SHARE
Ad
படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: பத்துமலை இரத ஊர்வலம் இன்று அதிகாலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்து மலையை வந்தடைந்தது.

பல முறையீடுகளுக்குப் பிறகே இந்த முறை இரத் ஊர்வலம் நடத்த அனுமதி கிடைத்ததாக ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா அண்மையில் ஒரு காணொலி வாயிலாகத் தெரிவித்திருந்தார்.

கொவிட்-19 தொற்றுக் காரணமாக இம்முறை இரத ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையையும், எந்தவொரு கொண்டாட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஜனவரி 27-ஆம் தேதி தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு ஊர்வலமாக சென்று பத்துமலையிலிருந்து ஜனவரி 29-ஆம் தேதி மீண்டும் மாரியம்மன் ஆலயத்திற்குத் திரும்பும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, பினாங்கில் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலின் இரத ஊர்வலமும் இன்று அதிகாலையில் நடந்தேறியது. இதற்கு மாநில அரசிடமிருந்து எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை என்று துணை முதல்வர் பி.இராமசாமி சாடியுள்ளார்.