Home One Line P2 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு சசிகலா விடுதலையானார்

4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு சசிகலா விடுதலையானார்

718
0
SHARE
Ad

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று விடுவிக்கப்படுவார் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

2017- ஆம் அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் இரு முறை பிணையில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில், அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அவர் விடுதலையாவதை முன்னிட்டு, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சசிகலாவின் விடுதலை ஆவணத்தில் கையெழுத்து பெற்றனர்.

சசிகலா விடுதலையானதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிகிச்சை முடிந்து பிப்ரவரி 3- ஆம் தேதி சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.