Home One Line P1 பட்டர்வொர்த் துறைமுகம் தீர்வையற்ற வணிக மண்டலமாக மாற்றம் கண்டது

பட்டர்வொர்த் துறைமுகம் தீர்வையற்ற வணிக மண்டலமாக மாற்றம் கண்டது

585
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பிப்ரவரி 1 முதல் பினாங்கின் பட்டர்வொர்த் துறைமுகம் தீர்வையற்ற வணிக மண்டலமாக (free trade zone) மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பினாங்கு துறைமுக ஆணையம் (பிபிசி) அண்மையில் அறிவித்தது.

பிபிசி தலைவர் டான் டீக் செங் கூறுகையில், நிதி அமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தை தீர்வையற்ற வணிக மண்டலமாக மாற்ற வர்த்தமானி செய்ய ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

இதன் மூலமாக அதிகமான உலகளாவிய வணிகங்கள் பட்டர்வொர்த்திற்கு செல்ல முடியும் என்பதால் இது பினாங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று டான் கூறினார்.

#TamilSchoolmychoice

“போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் மற்றும் நிதி அமைச்சரின் உதவி மற்றும் உந்துதலுடன், பினாங்கின் புகழ்பெற்ற தீர்வையற்ற வணிக சகாப்தம் மீண்டும் வர உள்ளது,” என்று அவர் கூறினார்.

தீர்வையற்ற வணிக மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும் என்று டான் கூறினார், ஒன்று வணிக நோக்கத்திற்காக, மற்றொன்று தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கில் அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பிபிசி இப்போது கவனம் செலுத்தும் என்று தான் கூறினார்.