Home One Line P1 “மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை

“மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்ததாக டி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது.

“புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் (ஹுசிர் முகமட்) இந்த விஷயத்தை ஆராய்வதாக எனக்குத் தெரிவித்தார். சட்ட மீறல் ஏதேனும் இருந்தால் நாங்கள் சட்டத்துறைத் தலைவருடன் கலந்துரையாடுவோம். குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று, பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மர்சுக் ஷாரி, சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (ஜாய்ஸ்) அக்கற்பித்தல் குறித்து கிட்டத்தட்ட விசாரணை முடிந்துவிட்டது என்றும், இது “இபு யாதி” என்ற பெயரில் ஒரு பெண்ணால் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வான் நூர் ஹயாதி வான் அலியாஸ் 41, மதவெறிகளை கற்பித்தல் அல்லது புதிய மதங்களைக் கொண்டுவரவில்லை என்று மறுத்து, யாயாசன் தக்வா இஸ்லாமியா மலேசியா (யாடிம்) தலைவர் நஸ்ருடின் ஹாசன் மன்னிப்புக் கோர ஏழு நாட்கள் அவகாசம் அளித்திருந்தார்.