கோலாலம்பூர்: கடந்த ஜனவரி 13 அன்று அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை வருகிற பிப்ரவரி 4- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதனிடையே, கடுமையான நடைமுறைகளுக்கு உட்பட்டு மேலும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். பிப்ரவரி 5-ஆம் தேதி தொடரும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிப்ரவரி 18 அன்று முடிவடையும்.
கடந்த மாதம், நாட்டில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்தது. இதில் சரவாக்கில் ஒரு சில மாவட்டங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டன.