Home One Line P1 அமைச்சர் ரினா ஹருணுக்கு ஒரு மில்லியன் பணம் எங்கிருந்து வந்தது?

அமைச்சர் ரினா ஹருணுக்கு ஒரு மில்லியன் பணம் எங்கிருந்து வந்தது?

416
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் திவாலாக அறிவிக்கப்படாதபடி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடனை அடைக்க பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் பயன்படுத்திய வளங்கள் குறித்து ஜசெக சட்டமன்ற உறுப்பினர் விளக்கம் கோரியுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளிப்படுத்திய சொத்து அறிவிப்பு பட்டியலின் அடிப்படையில் ரினாவின் சொத்து குறித்த கேள்வியை கேனிங் சட்டமன்ற உறுப்பினர் ஜென்னி சோய் கேள்வி எழுப்பியுள்ளார்.

டம்: கேனிங் சட்டமன்ற உறுப்பினர் ஜென்னி சோய்

“ரீனா, பாரிஸை தளமாகக் கொண்ட ஒரு திரைப்பட நிறுவனத்தில் கடனைத் தீர்த்ததாகக் கூறப்பட்டது. அவருக்கு 1,340,642.02 கடனால் திவால் அறிவிப்பு வழங்கப்பட்டது. 15 மாத குறுகிய காலத்தில் அத்தகைய கடனை அடைப்பதற்கு அவர் எவ்வாறு போதுமான பணத்தை திரட்ட முடிந்தது என்பதை அவர் விளக்க வேண்டும். சொத்து பிரகடனத்தின் தகவல்கள் அவரது சொத்துக்கள் 72,000 ரிங்கிட் மட்டுமே. 34,004.48 ரிங்கிட் வருமானத்துடன் எவ்வாறு அவர் இதனைச் செய்தார், “என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ரினாவின் வருமானம் 2019- ஆம் ஆண்டிலிருந்து மாறவில்லை என்றால், அந்த வருமானத்தில் ஒன்று கூட செலவழிக்காவிட்டால், நிதி திரட்டவும் கடனைத் தீர்க்கவும் அவருக்கு 40 மாதங்கள் தேவைப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

2019 நவம்பரில் ரினா தனது சொத்துக்கள் குறித்து தவறான அறிவிப்பை வெளியிட்டாரா என்றும் சோய் கேள்வி எழுப்பினார்.

“ஓர் அமைச்சரவை அமைச்சராகவும், அரசு ஊழியராகவும், ரீனா விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்று, பிரி மலேசியா டுடே, தயாரிப்பு மற்றும் திரைப்பட நிறுவனமான சார்ல் நோவோவிஷனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞரான மார்க் ஹோவை மேற்கோள் காட்டி, கடந்த வாரம் ரினா தனது கடனைத் தீர்த்துக் கொண்டதாக அறிவித்தது.