கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அவரைத் தற்காப்பு வாதம் புரிய உத்தரவிட்டார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான், மூன்று வழக்குகளுக்கும் நம்பகமான ஆதாரங்களை அரசு தரப்பு முன்வைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் ரோஸ்மா தற்காப்பு வாதம் புரிய வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.