சென்னை: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும், அவருடன் சரத்குமார், ராதிகா, சீமான், பாரதி ராஜா ஆகிய பிரபலங்கள் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அம்மாவின் தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக – அமமுக இணைப்பு குறித்து சசிகலா வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும் விரைவில் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பதாகவும் அவர் கூறினார்.
சசிகலா அதிமுகவுக்குள் வருவதை முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக – அமமுக இணைப்பு ஏற்படவில்லை என்றால், அமமுக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கவும் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வகையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், ராதிகா சந்திப்பு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சசிகலாவை சந்தித்திருக்கிறார். முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் சசிகலாவை விரைவில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.