Home One Line P1 600,000-க்கும் அதிகமாக மக்கள் தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு

600,000-க்கும் அதிகமாக மக்கள் தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு

424
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நேற்று புதன்கிழமை வரை, 637,000 பேர் மைசெஜாதெரா கைபேசி செயலி மூலமாக கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்காக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மைசெஜாதெராவில் பதிந்து கொள்ள பயனர்கள் தங்கள்  செயலியை புதுப்பிக்க  வேண்டும்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை கட்டம் 1-இல், முன்னணி பணிக்குழு, அமலாக்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 50,000 பேர் சம்பந்தப்பட்ட உயர் ஆபத்துள்ள ஆசிரியர்களுக்கானது.

#TamilSchoolmychoice

இப்போது, மருத்துவமனை துப்புரவு பணியாளர்களும் இந்த முதற்கட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டம், ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை நடத்தப்படும். இதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அதிக ஆபத்துள்ள குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாம் கட்டம், மே முதல் பிப்ரவரி 2022 வரை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டுள்ளது.