Home One Line P1 மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

476
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் போன்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி பெற முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், மருத்துவமனைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுத்தம் செய்பவர்கள், முதல் கட்டத்தில் அவை சேர்க்கப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் அதிக ஆபத்துள்ள ஆசிரியர்களை சேர்க்கும் திட்டம் குறித்து கொவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு இன்னும் விவாதித்து வருவதாக கைரி கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அமைச்சின் நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஹனிப் ஜைலானி, முதல் கட்டத்தில் மருத்துவமனை துப்புரவாளர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போட தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லை என்று கூறினார்.