Home One Line P1 தேசிய கூட்டணி கட்சிகளின் அனைத்து இயக்குனர்களையும் சந்தித்த அஸ்மின்

தேசிய கூட்டணி கட்சிகளின் அனைத்து இயக்குனர்களையும் சந்தித்த அஸ்மின்

421
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி நேற்று இரவு புத்ராஜெயாவில், கூட்டணி தேர்தல் அமைப்பு மூலம் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி தலைமையேற்றார்.

தேசிய கூட்டணி கட்சிகளின் அனைத்து தேர்தல் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சந்திப்பு நடந்தது என்று அஸ்மின் கூறினார்.

“மக்களின் ஆதரவை உருவாக்குவதற்காக தேர்தல் பணிகள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று முகநூலல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மூலம், பாஸ் கட்சியைப் பிரதிநிதித்து கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், மாநில அளவில் தேர்தல் கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்று அஸ்மின் கூறினார்.

“இது பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளைக் கொண்டுள்ள தேசிய கூட்டணியின் தன்மயைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.