Home One Line P2 பிபைசர் தடுப்பூசி 94 விழுக்காடு செயல்படுகிறது

பிபைசர் தடுப்பூசி 94 விழுக்காடு செயல்படுகிறது

482
0
SHARE
Ad

வாஷிங்டன் : பிபைசர் கொவிட்-19 தடுப்பூசி வழகங்கப்பட்டதிலிருந்து பயனுள்ள முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரங்களை மீண்டும் திறக்க விரும்பும் நாடுகளுக்கு இது ஒரு முக்கிய தருணமாகும்.

இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரண்டு முறை பிபைசர் தடுப்பூசியைப் பெற்றவர்கள் கொவிட் -19 சம்பவங்களிலிருந்து, குறிப்பாக அனைத்து வயதினரிடமும் 94 விழுக்காடு நோய் எதிர்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1.2 மில்லியன் மக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில்,தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதில் முதல் தடுப்பூசியைப் பெற்றவர்கள் 57 விழுக்காடு எதிர்ப்பு உள்ளவர்கள் என்று புதன்கிழமை நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான பிபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, இங்கிலாந்தில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 புதிய பிறழ்வுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.