Home One Line P1 கட்டுமானப் பாலத்தை மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்

கட்டுமானப் பாலத்தை மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்

661
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எம்ஆர்ஆர்2 கட்டுமானப் பாலத்தில் மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நேற்று புதன்கிழமை லாரி மோதியதால், பாலத்தின் ஒரு பகுதி கூண்டுந்து ஒன்றின் மீது இடிந்து விழுந்தது. அதில் ஐவர் பயணம் செய்தனர். அவர்களில் இருவர் மாண்டனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சுல்கிப்ளி யஹ்யா கூறுகையில், 40 வயதான லாரி ஓட்டுனரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று கைது செய்யப்பட்ட அந்நபர், சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

யுஎஸ்ஜே 1- இல் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து பேர் அக்கூண்டுந்தில் இருந்தனர். இரண்டு பெண்கள், 42 மற்றும் 47 வயதுடையவர்கள் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர். ஓர் ஆண் மற்றும் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனர்.