Home One Line P1 தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முன்னணி பணியாளர்களை முந்திச் செல்லும் நபர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கபப்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறினார்.

மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) கட்டளை 2021- இன் கீழ் இது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆயினும், இதுவரையில் இது தொடர்பாக எந்த ஒரு புகார்களும் அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது வரையிலும் இது குறித்த புகார்கள் எதுவும் பெறவில்லை. அவை சமூக ஊடகங்களில் மட்டுமே பரவலாக உள்ளன,” என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், கொவிட் -19 தடுப்பூசிக்காக முந்திச் செல்லும் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக முன்னணி பணியாளர்கள் வரிசை பட்டியலை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் நிறுவியுள்ளது என்று கூறினார்.

https://www.vaksincovid.gov.my/ என்ற இணையதளத்தில் இந்த வழிகாட்டுதல்கள் பதிவேற்றப்படும்.