Home One Line P1 அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து

அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து

931
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.

15- வது பொதுத் தேர்தலில், அம்னோ பெர்சாத்துவுடன் ஒத்துழைக்காது என்று அம்னோ கடிதம் அனுப்பிய பின்னர் இன்று ஹம்சா செய்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பாஸ் , ஸ்டார், எஸ்ஏபிபி, மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகளுடன், அடுத்த தேசிய கூட்டணி உச்சமன்றக் குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஹம்சா கூறினார்.

“இதுதொடர்பாக, மார்ச் 4, (வியாழக்கிழமை) மாலை, பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு முடிவு செய்யப்படும் என்று கட்சி அரசியல் பிரிவு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நிலைப்பாடு அடுத்த தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப்படும், ” என்று அவர் கூறினார்.

அம்னோவிற்கு தற்போது தேசிய கூட்டணி அமைச்சரவையில் எட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் ஜி.எல்.சியில் பல தலைவர்கள் உள்ளனர்.