Home One Line P1 பெர்சாத்துவிடமிருந்து விலகுவது அம்னோவின் பக்குவமற்ற முடிவு

பெர்சாத்துவிடமிருந்து விலகுவது அம்னோவின் பக்குவமற்ற முடிவு

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவை பக்குவமற்ற நிலைப்பாடு என்று விமர்சித்துள்ளார்.

பெர்சாத்துவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று ஒரு கடிதத்தை இரகசியமாக அனுப்ப வேண்டிய அவசியம் சாஹிட்டுக்கு இல்லை என்று அனுவார் கூறினார்.

“தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாள் உள்ளது, இந்த தவணை 2023-இல் முடிவடைகிறது. இந்த நீண்ட காலகட்டத்தில் பல்வேறு விஷயங்கள் நடக்கக்கூடும். இந்த முடிவு கட்சியை ஒரு பாதகமான நிலையில் தள்ளுகிறது. அடுத்த தேர்தலின் போது கட்சியின் கொள்கை அப்போதைய தலைவரால் தீர்மானிக்கப்படும்.

#TamilSchoolmychoice

“இந்த பக்குவமற்ற நிலைப்பாட்டின் மூலம், நாம் நம்மை இழக்க வழி வகுத்துள்ளோம். அரசாங்கத்தில் பேரம் பேசும் சக்தி பலவீனமாக உள்ளது. பின்விளைவுகளைச் சுமப்பவர்கள் அடிமட்ட உறுப்பினர்களாக உள்ளனர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்திருந்தார்.