Home One Line P1 தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது

தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.

அனைத்து மலாய்-முஸ்லீம் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் குறிக்கோளுடன் தனது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதாகவும், இதுவே வெற்றிக்கான திறவுகோல் என்றும் பாஸ் வியூக இயக்குனர் முகமட் கைருடின் அமன் ரசாலி கூறினார்.

“பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளபடி, நாங்கள் முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தி தேசிய கூட்டணியுடன் இருப்போம். அம்னோ அனுப்பிய கடிதத்தை தேசிய கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்படும், ” என்று அவர் எப்எம்டிக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இது பாஸ் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் சொந்த கருத்துக்களை கொண்டுள்ளனர். பாஸ் தனது நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. உம்மாவை ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை கடினமாக உழைப்போம், ” என்றார்.