மொகிதினை விசாரிப்பதன் மூலம் ஊழல் தடுப்பு ஆணையம் அதன் சுதந்திரத் தன்மையை நிரூபிக்குமா என்று ஜசெக தலைமைச் செயலாளரான அவர் கேள்வி எழுப்பினார்.
“அம்னோ குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சாவும் பிரதமர் பெட்ரோனாஸின் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பை நிராகரித்தார், ஏனெனில் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது. முரண்பாடாக, பிரதமர் ஊழலை எதிர்த்துப் போராடுவது அரசாங்கத்தின் முக்கிய உறுதிப்பாடுகளில் ஒன்றாகும். இருப்பினும், மொகிதின் எதார்த்தத்தில் அவ்வாறு செய்யவில்லை.
“2020-இல் அனைத்துலக ஊழல் குறியீட்டு (சிபிஐ) அறிக்கையில், மலேசியா 57- வது இடத்திற்கு தள்ளியது. இது 2017- ஆம் ஆண்டில் 62- வது இடத்திலும், 2018- இல் 61- வது இடத்திலும் இருந்தது. 2019- ஆம் ஆண்டில் 51- வது இடத்திலும் இருந்தது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.