Home One Line P2 குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்

582
0
SHARE
Ad

சென்னை: குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீரென மரணமுற்றது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த இவர், பட வாய்ப்புகள் இல்லாததால் பரோட்டா கடையில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உணவு உண்பதற்கே கஷ்டப்படுவதாகக் கூறி காணொலி ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.