பலியானவர்களில் மூன்று பேர் கட்டுமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள். அவர்களில் இருவர் சம்பவ இடத்தில் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மற்றொருவர் பின்னர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மலேசியரான கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பாரம் தூக்கியிலிருந்து இருந்து எஃகு, வாகனத்தை நசுக்கியதால் கார் ஓட்டுனர் பலத்த காயமடைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
சுமார் 36.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த இரு தொழிலாளர்களும் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. மற்றொரு தொழிலாளியை விடுவிக்க மீட்புப் பணியாளர்கள் இன்னும் முயற்சித்து வருவதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பெர்சியாரான் ஆலாம் டாமாய், புஞ்சாக் பன்யான் அருகே காலை 8.45 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், 26 நபர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் அது கூறியுள்ளது.