Home நாடு மின்னல் தாக்கி கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது

மின்னல் தாக்கி கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது

620
0
SHARE
Ad

கோத்தா பாரு: கிளந்தான் கம்போங் சிரே, சிம்பாங் எம்பாட் என்ற இடத்தில் மின்னல் தாக்கி ஐந்து கார்கள் பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது.

மாலை 5.39 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோத்தா டாருல்னைம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் துன்ஜோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் கோத்தா டாருல்னைம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் ரிட்சுவான் அலி தெரிவித்தார்.

“இரண்டாக பிளந்த காரின் மீது மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது, மேலும் ஒருவர் பலியானார். அருகிலுள்ள ஐந்து வாகனங்களும் இதில் சம்பந்தப்பட்டன,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட காரில் பட்டாசுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவியது. உரத்த வெடிப்பைத் தொடர்ந்து எரியும் காரும் காணொலி ஒன்றில் இடம் பெற்றிருந்தது.