Home One Line P1 நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: 3-வது நபரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை

நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: 3-வது நபரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை

632
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை பெசி-உலு கெளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நேற்று இறந்த மூன்றாவது ஆடவரின் உடல் சம்பவம் நடந்து 31 மணி நேரத்திற்குப் பிறகும் இன்னும் மீட்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரை தாக்கிய பாரம் தூக்கியை தூக்குவதற்கு முன்பு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை யூ வடிவிலான உருளையை அகற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவித்தது.

நேற்று காலை 8.45 மணியளவில், நெடுஞ்சாலை கட்ட பயன்படும் பாரம் தூக்கி 120 அடி உயரத்தில் இருந்து பெரோடுவா பெஸ்ஸா காரில் விழுந்தது.

#TamilSchoolmychoice

இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொருவர் பின்னர் காலமானார் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் சீன குடிமக்கள்.

மலேசியரான கார் ஓட்டுனர் பலத்த காயமடைந்தார்.

ஆறு மாதங்களில் எஸ்யூகெஈ சம்பந்தப்பட்ட மூன்றாவது விபத்து இதுவாகும்.