ஷா ஆலாம்: காவல் துறையினரிடையே பணம் வாங்கும் கலாச்சாரம் உள்ளது என்பதை காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது கீழ்நிலையில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்ல என்றும், உயர் மட்டங்களிலும் உள்ளது என்று அவர் கூறினார்.
காவல் படையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை சமூகத்தால் ஆதரிக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காகவே, இந்த பழைய கலாச்சாரத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.