Home One Line P1 காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடுவது குறித்து பேசப்படும்

காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடுவது குறித்து பேசப்படும்

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மை வீழ்த்த முயற்சிக்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை தாம் அறிந்திருப்பதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று தெரிவித்தார்.

இருப்பினும், இதுவரை அப்துல் ஹாமிட் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.

“இது கட்டுப்பாட்டில் உள்ளது, நான் நடவடிக்கை எடுப்பேன். துணை தேசிய காவல் துறைத் தலைவருடன் கலந்துரையாடுவேன்,” என்று புக்கிட் அமான் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் கூறிய கூட்டம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை அவர் வெளிப்படுத்துவாரா என்று கேட்டபோது தேசிய காவல் துறைத் தலைவர் அவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், இந்த பிரச்சனைக்கு விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) நிறுவப்பட தேவையில்லை என்ற தனது கருத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“இது ஒரு மோசமான விஷயம் என்பதை என் தோழர்களும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். யாராவது மற்ற குழுக்களை (காவல் படையில்) உருவாக்க விரும்பினால், நிறுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.