Home One Line P2 அமெரிக்கா: பேரங்காடியில் பத்து பேர் சுட்டுக் கொலை

அமெரிக்கா: பேரங்காடியில் பத்து பேர் சுட்டுக் கொலை

754
0
SHARE
Ad

கொலரோடா: அமெரிக்கா கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள பேரங்காடியில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மையில், அட்லாண்டாவில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

முதலில் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த இளைஞர் சுட ஆரம்பித்தார். அதனை அடுத்து, காவல் துறையினர் பேரங்காடிக்குள் நுழைந்து அந்த ஆடவனை சுற்றி வளைத்தனர்.

#TamilSchoolmychoice

ஒரு காவல் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தைக் கண்டறிய காவல் துறையினர் கைது செய்யப்பட்ட ஆடவர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.