Home One Line P1 18 வயது வாக்குரிமை : மொகிதின் மீது 18 இளைஞர்கள் வழக்கு

18 வயது வாக்குரிமை : மொகிதின் மீது 18 இளைஞர்கள் வழக்கு

541
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர் அடங்கிய ஓர் குழுவினர் மொகிதின் யாசினுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளனர்.

18 வயதைக் குறிக்கும் வகையில் 18 இளைஞர்களும் யுவதிகளும் ஒருங்கிணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை 2021-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் வாக்களிக்கும் வகையில் நடைமுறைகள் அமுலாக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குப் பின்னர் இந்தத் திட்டத்தை ஒத்தி வைக்கும் முடிவை இரத்து செய்ய வேண்டும் என்றும் தங்களின் வழங்ககில் இந்த இளைஞர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) தொடுக்கப்பட்டது.

14 நீதிமன்ற உத்தரவுகளை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தங்களின் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.