Home One Line P2 நெத்தன்யாகு ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது!

நெத்தன்யாகு ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது!

694
0
SHARE
Ad

ஜெருசேலம்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் ஊழல் வழக்கு மீண்டும் தொடங்க உள்ளது.

71 வயதான நெத்தன்யாகு, இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக மூன்று தனித்தனியான வழக்குகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பிப்ரவரியில் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்று வாதிட்டார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் கடந்த மாத பொதுத் தேர்தல் காரணமாக அவரது வழக்கு பல முறை தாமதமானது.

நெத்தன்யாகுவின் வலதுசாரி முகாமை மற்றும் அவரை எதிர்க்கும் கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலிய அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் தவறிவிட்டது.

அதிபர் ருவன் ரிவ்லின் இந்த வாரம் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை அவர் நிர்ணயிப்பார் என்று கூறப்படுகிறது.

நெத்தன்யாகு பிரதமராக இருந்தால், அவர் பதவியில் இருக்கும்போது வழக்குத் தொடர்வதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வார் என்று எதிர்கட்சியினர் அஞ்சுகின்றனர்.