Home உலகம் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சிக் காலம் முடிவடைந்தது

பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சிக் காலம் முடிவடைந்தது

596
0
SHARE
Ad

ஜெருசேலம்: இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சிக் காலம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தேசியவாத நப்தலி பென்னட் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

டெல் அவிவில், இரண்டு ஆண்டுகளில் நான்கு முடிவில்லாத தேர்தல்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கானோர் இந்த முடிவை வரவேற்றனர்.

“இஸ்ரேலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் கொண்டாடுகிறேன்” என்று ராபின் சதுக்கத்தில் எரேஸ் பீசுனர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் வெற்றிபெற வேண்டும், எங்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், 49 வயதான பென்னட் 2023- ஆம் ஆண்டில் பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரான 57 வயதான யயர் லாப்பிட்டிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பார்.