Home நாடு பொதுத் தேர்தலை நடத்த வற்புறுத்தக்கூடாது!

பொதுத் தேர்தலை நடத்த வற்புறுத்தக்கூடாது!

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை நடத்துமாறு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அம்னோ உள்ளிட்ட எந்தக் கட்சியும் வலியுறுத்தத் தேவையில்லை என்று அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால், அது தற்போதைய கொவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது, எதிர்ப்பது மற்றும் குறைப்பதில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளில் அம்னோ உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்.

#TamilSchoolmychoice

“அம்னோ தேர்தல் இயக்குநராக, அரசின் முயற்சிகளில் வெற்றிபெறவும், மக்களை இந்த தொற்றுநோயிலிருந்து விடுவிக்கவும் அரசாங்கத்திற்கு தொடர்ந்து உதவ நாங்கள் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

“இந்த நேரத்தில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மாநில மற்றும் நாடாளுமன்றத்தில் அம்னோ தேர்தல் இயந்திரங்கள், கொவிட் -19 ஐத் தடுக்க அரசாங்கத்திற்கு உதவுவதற்காக அணிதிரட்டப்பட வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.